செந்துறையில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் செந்துறையில் நாளை நடக்கிறது.
செந்துறையில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
Published on

அரியலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் ஆகியவை இணைந்து மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்காக நடத்தும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்களும், வெளி மாவட்டங்களை சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 18 வயது முதல் 45 வயது வரையிலான 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். எனவே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை நாடுனர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்து இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com