

சென்னை,
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள காத்தான்கடை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது.
அப்போது எதிரில் மேல்மருவத்தூர் ராமாவரம் கிராமத்தில் இருந்து நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக கல்பாக்கம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்தது. இரண்டு பேருந்துகளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.