அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

செங்கோட்டையில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
Published on

செங்கோட்டை:

தென்காசி மாவட்ட பா.ஜனதா விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, செங்கோட்டை பி.எல்.எம். ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி அகாடமி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பா.ஜனதா தலைவா ராஜேஸ்ராஜா, பி.எல்.எம். ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனா எல்.எம்.முரளி ஆகியோர் தலைமை தாங்கினர். நகரத்தலைவா வேம்புராஜ் முன்னிலை வகித்தார். செங்கோட்டை 14-வது வார்டு நகர்மன்ற உறுப்பினரும், தென்காசி மாவட்ட பா.ஜனதா விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவருமான பொன்னுலிங்கம் என்ற சுதன் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக குற்றாலம் விவேகானந்தா ஆசிரம நிறுவனா சுவாமி அகலானந்தமகராஜ் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.எம். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்ட மாதா அமிர்தானந்தமயி சேவை மைய ஒருங்கிணைப்பாளா முருகையா வாழ்த்தி பேசினார். பா.ஜனதா நிர்வாகிகள் முன்னாள் நகர்மன்ற உறுப்பினா மணிகண்டன், விளையாட்டு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஜமீன்முத்துக்குமார், விஷ்ணுகுமார், கிருஷ்ணன், செங்கோட்டை நகர துணைத்தலைவர் லட்சுமணன், ஒன்றிய தலைவர் கண்ணபிரான், ஒன்றிய துணைத்தலைவர் சிவா, நகர பொதுச்செயலாளர் கோமதிநாயகம், நகர செயலாளர் முத்து, நகர இளைஞரணி பொதுச்செயலாளர் ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் பலா கலந்து கொண்டனா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com