

சென்னை,
அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன், அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு விரைவு பஸ்களில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு கருவி (இ.டி.எம்.) மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இக்கருவியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, 'கியூ ஆர்' குறியீடு ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறுவதை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாதமும் இம்முறையில் அதிகபட்சமாக மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு வழங்கும் கண்டக்டர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.