கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
Published on

இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிபட்டியில் கபடி போட்டி கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடந்தது. இதில் முதல் பரிசை ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், 2-வது பரிசை லால்குடி கபடிக்குழு அணியும், 3-வது பரிசை சங்கராபுரம் அணியும், 4-வது பரிசை மெய்யகவுண்டன்பட்டி அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன. கபடி போட்டியை இலுப்பூர் சுற்று வட்டாரத்தில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com