போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு; கலெக்டர் வழங்கினார்

செங்கோட்டை அரசு நூலகத்தில் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பரிசு வழங்கினார்.
போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு; கலெக்டர் வழங்கினார்
Published on

செங்கோட்டை;

செங்கோட்டை அரசு பொது நூலக கட்டிடத்தில் செங்கோட்டை நூலக வாசகா வட்டம் சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வு காவலர் தேர்வு என போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு வாசகா வட்ட தலைவா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், வாசகர் வட்ட துணைத்தலைவா ஆதிமூலம், இணைச்செயலாளா செண்பகக்குற்றாலம், போட்டித் தேர்வு பொறுப்பாளா விழுதுகள் சேகர் ஆகியோர் முன்னிலைவகித்தனா. வாசகர் வட்ட பொருளாளா தண்டமிழ்தாசன்சுதாகர் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி சுடலை, ஜேபி. கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி, அகாடமி இயக்குனர்கள் மாரியப்பன், ஐ.ஏ.எஸ்.அருணாச்சலம், ஒருங்கிணைப்பாளா ரமேஷ், எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவா ஜவஹர்லால்நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா. நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com