பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

பொட்டல்புதூரில் காமராஜர் பிறந்தநாளையொட்டி நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
Published on

கடையம்:

கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்திய எழுத்தறிவு திட்டத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் கடையம் வட்டாரத்தில் உள்ள 10 உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சிக்கு கவிஞர் கண்ணதாசன் தலைமை தாங்கி, போட்டியில் சிறப்பாக பேசியவர்களை தேர்வு செய்தார். இந்திய குழந்தைகள் மன்றம் சார்பில் சரவணன், ஷாஜகான் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பதக்கம், சான்றிதழ்களை வழங்கினர். முன்னதாக, பொட்டல்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராமலட்சுமி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் செந்தில் நன்றி கூறினார். ஏற்பாடுகளை இந்திய எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் பாப்பு தலைமையில் பத்மா, ஞான ஜாய்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com