விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
Published on

போலீஸ்துறை பயிற்சிபள்ளி மாணவர்கள் மற்றும் ஆயுதபடை போலீசாரின் மன அழுத்தத்தை போக்கவும், பொதுமக்கள் இடையே நல்லுறவை பேணும் வகையிலும் விளையாட்டு போட்டிகள் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் ஓட்டப்பந்தயம், வாலிபால், கபடி, சிலம்ப வீரர்களுக்கு குழு விளையாட்டு போட்டிகள் காலை 10 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை நடைபெற்றது.

அதன்பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் கலந்து கொண்டு போலீஸ்துறை மற்றும் பொதுமக்கள் சார்பில் பங்கேற்ற இளைஞர்களுக்கு உடல் திறன் பேணிக்காத்தல் அதன்மூலம் கிடைக்கப்பெறும் பலன்கள் போன்றவற்றை எடுத்துரைத்தார்.

மேலும் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளையும் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் பயிற்சி பள்ளி அலுவலர்கள், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com