ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு ஊர்வலம்

கிருஷ்ணகிரியில் ஆட்சிமொழி சட்ட வார விழா விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு ஊர்வலம்
Published on

கிருஷ்ணகிரியில் ஆட்சிமொழி சட்ட வார விழா விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி சட்ட வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி, பழையபேட்டை காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது.

பின்னர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார். இதில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஜோதி, தாசில்தார் சம்பத், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

கலை நிகழ்ச்சி

தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளை நினைவு கூறும் வகையில், ஆட்சிமொழி சட்ட வாரம் ஒருவாரம் கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வருகிற 8-ந் தேதி வரை ஆட்சிமொழி சட்ட வார விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

தொடர்ந்து அரசு பணியாளர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம், ஆட்சிமொழி சட்ட வரலாறு, ஆட்சி செயலாக்க அரசாணை, அரசு பணியாளர்களுக்கு தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, மொழி பயிற்சி, மொழி பெயர்ப்பும், கலை சொல்லாக்கமும், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலவை அமைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. ஆட்சிமொழிச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றம், பொதுமக்களுக்கு ஆட்சிமொழி சட்டம் குறித்த விழிப்புணர்வு திட்ட விளக்க கூட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com