தயாரிப்பாளர் கே ராஜன் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

திரைப்பட தயாரிப்பாளர் கே ராஜன் இன்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்
தயாரிப்பாளர் கே ராஜன் மரணம்:  எடப்பாடி பழனிசாமி இரங்கல்
Published on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு. கே. ராஜன் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். தமிழ்த் திரையுலகில் சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில் மிக முக்கியக் குரலாக விளங்கியவர் திரு. கே. ராஜன் அவர்கள்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத் துறையைச் சார்த்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்

X

Daily Thanthi
www.dailythanthi.com