உற்பத்தி பாதிப்பு: பட்டுப்புழுக்களை தீயிட்டு எரிக்கும் விவசாயிகள்

பட்டுப்புழு வளர்ப்பை கைவிடாமல் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
உற்பத்தி பாதிப்பு: பட்டுப்புழுக்களை தீயிட்டு எரிக்கும் விவசாயிகள்
Published on

சென்னை,

பட்டுப்புழு வளர்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஆயக்குடி, கணக்கன்பட்டி, சத்திரப்பட்டி, தாளையூத்து, தொப்பம்பட்டி, சாணார்பட்டி பகு திகளில் மல்பெரி சாகுபடி மூலம் விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தி செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சீதோஷ்ண நிலை மாறுபாட்டால் மாவட்டத்தில் பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பட்டுப்புழு வளர்ப்பை கைவிடாமல் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பழனி பகுதியில் தரம் இல்லாத முட்டைகள், வீரியம் இல்லாத இளம்புழுக்களால் பட்டுக்கூடு உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. அதாவது தரமற்ற புழுக்களால் கூடுகள் உருவாவதில் பாதிப்பு ஏற்பட்டு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தீ வைத்து எரிப்பு

பழனி அருகே கணக்கன்பட்டி பகுதியில் தரமில்லாத முட்டை களால் பட்டுக்கூடு உற்பத்தி கடுமையாக பாதித்ததால் விவசாயி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள கூடு கட்டாத பட்டுப்புழுக்களை குப்பையில் கொட்டினார். இதேபோல் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபடும் பல விவசாயிகளும் கூடு கட்டாத புழுக்களை குப்பையில் கொட்டியும், தீவைத்தும் எரிக்கின்றனர்.

கடும் வெயில் நிலவினாலும் தரமில்லாத இளம்பு ழுக்கள், முட்டைகள் தான் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்புக்கு பிரதான காரணமாகும். எனவே மத்திய, மாநில பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் புழுக்கள் வளர்ச்சி இல்லாதது குறித்து ஆய்வு செய்து போதிய தொழில்நுட்ப ஆலோசனை கள் வழங்க வேண்டும். அதேபோல் காப்பீடு திட்டத்தையும் புதுப்பிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com