

சென்னை,
சென்னை மெட்ரோவின் 2-ம் கட்ட திட்டம் 119 கி.மீ. நீளம் கொண்டது. இதில் 3 வழித்தடங்கள் மற்றும் அவற்றின் இடைவ ழிப்பிரிவுகள் அடங்கி உள்ளன. இந்த 2-ம் கட்ட மெட்ரோ திட் டத்துக்கு மெட்ரோ ரெயில்கள் தயாரிக்க பிரான்சை சேர்ந்த அல்ஸ்டாம் நிறுவனத்திடம் 135 மில்லியன் யூரோ மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஆந்திராவில் உள்ள ஸ்ரீசிட்டியில் இந்த நிறுவனம், டிரைவர் இல்லாத 96 ரெயில் பெட்டிகளை தயாரிக்கும் பணிகளை தொடங்கி இருப்பதாக செய்தி வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து, அல்ஸ்டாம் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆலிவர் லாயிசன் மேலும் கூறுகையில்,
'சென்னை மெட்ரோ ரெயில் லிட். நிறுவனத்துடனான எங்களின் நீண்டகால கூட்டாண்மையை நாங்கள் மதிக்கிறோம். சென்னையின் முதல் மெட்ரோ ரெயில் திட்டத்தில் எங்கள் கூட்டுப்பணி தொடங்கியது. சென்னை மெட்ரோவின் முதற்கட்டத்துக்கான ரெயில்களைத் தயாரிப்பதற்காக எங்கள் ஸ்ரீ சிட்டி ஆலையை அமைக்கவும் இது வழிவகுத்தது' என்றார்.