

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றிய நிர்மலாதேவி, அந்த கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு கடந்த 22 ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜரானார்கள். நிர்மலாதேவி கோர்ட்டில் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையை இன்று ஆகஸ்டு 5ந் தேதிக்கு நீதிபதி காயத்ரி ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான உதவி பேராசிரியர் முருகன் ஆஜராகாத நிலையில், மூவரையும் வரும் 19 ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த வாரம் நெல்லையிலுள்ள தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிர்மலாதேவி, மொட்டை போட்டவாறு நீதிமன்றத்தில் ஆஜரானார்.