சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பேராசிரியர் பெரியசாமியை நீக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பேராசிரியர் பெரியசாமி போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது குறித்த புகார் மீது தமிழக அரசு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பேராசிரியர் பெரியசாமியை நீக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,

சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பெரியசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.

பேராசிரியர் பெரியசாமி போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது குறித்த புகார் மீது தமிழக அரசு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட ஒருவரை பொதுக்குழு உறுப்பினராக நியமித்தால், அது சாகித்ய அகாடமியின் மதிப்பைக் குறைத்துவிடும்.

சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பேராசிரியர் பெரியசாமியை நீக்க வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தமிழ்நாடு அரசின் விசாரணையை விரைந்து நடத்தி, சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com