பேராசிரியர் க. அன்பழகன் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் அஞ்சலி

பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்.
பேராசிரியர் க. அன்பழகன் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் அஞ்சலி
Published on

சென்னை,

தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய பேராசிரியர் க.அன்பழகன், நள்ளிரவு 1.10 மணி அளவில் மரணம் அடைந்தார். அன்பழகன் மரணம் அடைந்ததை அறிந்ததும் மு.க.ஸ்டாலின் கண்ணீர் சிந்தினார். ஆஸ்பத்திரிக்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டனர்.

அதனை தொடர்ந்து க.அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com