ஊட்டிக்கு இன்ப சுற்றுலா அழைத்துச் சென்று கல்லூரி பேராசிரியை பாலியல் பலாத்காரம் - உடற்கல்வி இயக்குனர் கைது

பேராசிரியையை ஊட்டிக்கு இன்ப சுற்றுலா அழைத்துச் சென்ற குமரேசன் தங்கும் விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நீலகிரி,

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குமரேசன் (33 வயது). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரும், அதே கல்லூரியில் பணியாற்றும் 30 வயது பேராசிரியையும் காதலித்து வந்துள்ளனர். அந்த பேராசிரியையை ஊட்டிக்கு இன்ப சுற்றுலா அழைத்துச் சென்ற குமரேசன் அங்கு தங்கும் விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில், குமரேசனுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த பேராசிரியை அதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்ய முடியாது என குமரேசன் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியை கோவை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் இந்த வழக்கு ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், உடற்கல்வி இயக்குனர் குமரேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com