கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்தீத்தடுப்பு செயல் விளக்க நிகழ்ச்சி

கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்தீத்தடுப்பு செயல் விளக்க நிகழ்ச்சி
Published on

ராயக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலையம் சார்பில் கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமையில் தீத்தடுப்பு செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைப்பது, தீயணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த ஒத்திகை பயிற்சிகளை செய்து காண்பித்தனர். இதில் டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com