விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

நத்தப்பள்ளம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
Published on

வாய்மேடு:

தலைஞாயிறு ஒன்றியம் நத்தப்பள்ளம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு குபேட்டா உள்ளிட்ட வேளாண் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்குமாநில விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் மகா குமார் தலைமை தாங்கினார்.வேளாண் அலுவலர் நவீன் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ரூ.6 லட்சம் மதிப்பில் வேளாண்மை பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. வேளாண்மை துணை அலுவலர் வேதரெத்தினம். தலைஞாயிறு ஒன்றிய பொறியாளர் சுகுமார் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com