ராமநாதபுரம் மாவட்டத்தில் 9-ந்தேதி முதல் தடை உத்தரவு அமல்

வருகிற 9-ந் தேதி முதல் 2 மாத காலத்திற்கு 163 (1) தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 9-ந்தேதி முதல் தடை உத்தரவு அமல்
Published on

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30-ந்தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு வருகிற 9-ந் தேதி முதல் 2 மாத காலத்திற்கு 163 (1) தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர, வருகிற 9-ந்தேதி முதல் வரும் 15-ந் தேதி வரையும், அக்டோபர் 25-ந்தேதி முதல் 31-ந் தேதி வரை வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களில் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்படுகிறது. அதேபோல, நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் 1 கிலோ மீட்டருக்குள் மாவட்ட நிர்வாகத்தின் முன்அனுமதி பெற்று ஜோதி எடுத்து வரவேண்டும்.

மேலும், அஞ்சலி செலுத்த வரும் வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் முன்அனுமதி பெற்றுதான் வரவேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com