வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு

சாணார்பட்டி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு
Published on

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தி.பஞ்சம்பட்டி, அஞ்சுகுளிபட்டி, வேம்பார்பட்டி, கணவாய்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சிகளில் நடைபெறும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணி, 15-வது நிதிக்குழு மானிய திட்ட பணி, ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் செயல்படுத்தப்படும் பணிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிட சீரமைப்பு, புதிய பள்ளிகளின் கட்டுமான பணிகள், நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்கலாவதி, ஒன்றிய பொறியாளர்கள் பிரிட்டோ, பத்மாவதி, ஊராட்சி தலைவர்கள் சலேத்மேரி, தேவி, கந்தசாமி, நிஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com