ராமேஸ்வரம் கோவிலில் ரூ.207 கோடி செலவில் திட்டப்பணிகள் - அமைச்சர் சேகர் பாபு தகவல்


ராமேஸ்வரம் கோவிலில் ரூ.207 கோடி செலவில் திட்டப்பணிகள் - அமைச்சர் சேகர் பாபு தகவல்
x

பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒரு விரைவு திட்டத்தை ஏற்படுத்த உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு, தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-

"ராமேஸ்வரம் கோவிலில் ரூ.207 கோடி செலவில் 37 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகள் நிறைவடையும்போது ராமநாதசாமி திருக்கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமை பெறும். மேலும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒரு விரைவு திட்டத்தை ஏற்படுத்த உள்ளோம். இது தொடர்பாக அடுத்த மாதம் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது."

இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

1 More update

Next Story