கன்னியாகுமரியில் மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்

எந்திர படகுகளுக்கான மாதாந்திர மானிய டீசல் ஒதுக்கீடு 1,800 லிட்டரில் இருந்து 3,500 லிட்டராக உயர்த்தப்படும்.
கன்னியாகுமரியில்  மீனவர்களுக்காக விஜய் அளித்த   வாக்குறுதிகள்
Published on

தவெக தலைவர் விஜய் கன்னியாகுமரி பிரசாரத்தின் போது, சீரோ பாயிண்ட் பகுதிக்கு ரோடு ஷோ-வாக சென்றார். சீரோ பாயிண்டில் பிரசார வேனில் இருந்துபடி பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இங்கு மீனவர்களுக்காக 3 விஷயங்களை மட்டும் நான் கூறிவிடுகிறேன். நம் மீனவ நண்பர்களுக்கான அந்த விஷன் அண்ட் அஜெண்டாவை உங்களுடைய மீனவ நண்பனான நான் கூறுகிறேன். அதில் முதலாவதுமீனவர் பாதுகாப்பு உரிமை தொகை.மீன்பிடி தடைகாலத்திற்கான மீனவர் பாதுகாப்பு நிதி ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும். 2-வதுபடகு பாதுகாப்பு நிதி. படகுகளை விடுவிப்பது குறித்து தூதரக வழிகளில் பேச்சுவார்த்தை நடத்தும் வரை, வங்கி கடன்களை திருப்பி செலுத்தவும், மீனவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும், படகு உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் உடனடி இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்.

3-வதுகடல் தாய் வீட்டு வசதி திட்டம். கடலோர பகுதிகளில் உள்ள அனைத்து குடிசைகளையும், சிதலமடைந்த குடியிருப்புகளையும் அகற்றி, புயல்களை தாங்கக்கூடிய மற்றும் காலநிலை மாற்றத்தை தாங்கும் வீடுகளை கட்டுவதற்கான ஒரு தனி வீட்டு வசதி திட்டம் உருவாக்கப்படும். கடைசியாக மீனவர் எரிபொருள் பாதுகாப்பு திட்டம்.எந்திர படகுகளுக்கான மாதாந்திர மானிய டீசல் ஒதுக்கீடு 1,800 லிட்டரில் இருந்து 3,500 லிட்டராக உயர்த்தப்படும்.

ஒரு லிட்டருக்கு ரூ.15 என்ற நிலையான மானியம் படகு உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். ​இதெல்லாம் ஒரு சின்ன சாம்பிள் தான். இது ஏதோ தேர்தலுக்காக தி.மு.க. மாதிரி கூறுவது கிடையாது. உண்மையாக உங்களை நேசிப்பதின் வெளிப்பாடு இது. இப்படித்தான் நான் உங்களை உண்மையாக நேசிக்கிறேன். எல்லோரும் விசில் சின்னத்துக்கு தயவு செய்து ஓட்டு போடுங்கள். இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com