பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு

பள்ளிகளின் சீரான செயல்பாடுகளுக்குத் துணைபுரியும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மாதங்களில் திருத்தி அமைக்கப்பட்டன.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறையின்கீழ் செயல்படும் அரசுத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய அனைத்து வகைப் பள்ளிகளின் சீரான செயல்பாடுகளுக்குத் துணைபுரியும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மாதங்களில் திருத்தி அமைக்கப்பட்டன. இந்த அனைத்து வகைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்களுடைய பதவிக் காலம் 2024 ஏப்ரல், மே, ஜூலை மாதங்களில் முடிவடைய உள்ளன.

2024-2025-ம் கல்வியாண்டில் புதிதாகச் சேரும் மாணவர்களின் பெற்றோர்களையும் உள்ளடக்கிய புதிய பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைக்கும் பொருட்டு. 2022-2024-ம் ஆண்டிற்கான தொடக்கப் பள்ளிகளுக்கான மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 1-5-2024 முதல் 10-8-2024 வரையும், நடுநிலைப் பள்ளிகளுக்கான மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 24-4-2024 முதல் 20-7-2024 வரையும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 10-7-2024 முதல் 17-8-2024 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும். இதற்குரிய அரசாணை 29-2-2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது என்றும் பள்ளிக் கல்வித்துறை அரசுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com