தர்மபுரியில்அ.தி.மு.க. பொன்விழா மாநாடு பிரசார வாகனம்முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

தர்மபுரியில்அ.தி.மு.க. பொன்விழா மாநாடு பிரசார வாகனம்முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
Published on

தர்மபுரி:

மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு பிரசார வாகனம் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வருகிறது. இந்த பிரசார வாகனம் தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த பிரசார வாகனம் தொடக்க விழா தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பிரசார வாகனம் மற்றும் இருசக்கர வாகன ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக டவுன் பஸ் நிலையத்தை வந்தடைந்தது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி வேலூர் மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், நகர செயலாளர் பூக்கடை ரவி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, நீலாபுரம் செல்வம், வேலுமணி, மதிவாணன், சேகர், செந்தில்குமார், கோபால், செல்வராஜ், பசுபதி, விஸ்வநாதன், முருகன், மாவட்ட சார்பு அமைப்பு செயலாளர்கள் பழனிசாமி, தகடூர் விஜயன், கோவிந்தசாமி, வக்கீல் அசோக்குமார், தொழிற்சங்க நிர்வாகி சின்அருள்சாமி, நகர நிர்வாகிகள் அம்மா வடிவேல், பார்த்திபன், சுரேஷ், பலராமன், வேல்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com