பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம்

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம்
Published on

ராமநாதபுரம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா சார்பில் குழந்தை பருவத்தை பாதிக்க கூடிய குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகன தொடக்க விழா ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கலந்து கொண்டு குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகளை தடுத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு தொலைபேசி எண் 1098 வழங்கப்பட்டு உள்ளது. கிராம பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனம் மூலம் குறும்படங்கள் மற்றும் சுவரொட்டிகள் வாயிலாக விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு வாகனம் திருவாடனை வட்டத்தில் 5 நாட்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ள செல்கின்றது. பொதுமக்கள் குழந்தைகள், பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளை தடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சத்திய நாராயணன், சமூக நல அலுவலர் சாந்தி, தொழிலாளர் நல அலுவலர் பாரி, வேர்ல்டு விஷன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திர எபினேஷன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com