விவசாயிகளுக்கு முறையாக பயிர்காப்பீடு வழங்க வேண்டும்

நரிக்குடி பகுதியில் விவசாயிகளுக்கு முறையாப பயிர்காப்பீடு வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விவசாயிகளுக்கு முறையாக பயிர்காப்பீடு வழங்க வேண்டும்
Published on

நரிக்குடியில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு கூட்டம் டி.வேலங்குடி ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நரிக்குடி பகுதியில் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு பணியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. வறட்சி நிவாரண கணக்கெடுப்பை நியாயமான முறையில் மீண்டும் நடத்த வேண்டும். விடுபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நரிக்குடி பகுதியில் விடுபட்ட நரிக்குடி பிர்கா, அ.முக்குளம் பிர்காவிற்கு உடனடியாக பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நரிக்குடி பகுதியில் விவசாய நிலங்களில் எந்த பயிர் விதைத்தாலும் அதை பன்றிகள் அழித்து நாசமாக்கிவிடுகின்றன. எனவே பன்றி தொல்லைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 2-ந் தேதி விவசாயிகள் நரிக்குடி விவசாய அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்து காத்திருக்கும் போராட்டம் நடத்த வேண்டும் என்ற தீர்மானமத்தை மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்மொழிந்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராம்பாண்டியன், சிவகங்கை மாவட்ட செயலாளர் அய்யனார், நரிக்குடி வட்டார விவசாய பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நரிக்குடி ஒன்றிய கவுன்சிலர் சரளாதேவி போஸ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com