சொத்தை மீட்டுத்தர வேண்டும்

குத்தாலம் அருகே கிராமத்துக்கு சொந்தமான சொத்தை மீட்டுத்தர வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
சொத்தை மீட்டுத்தர வேண்டும்
Published on

மயிலாடுதுறை அருகே மாதிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மாதிரிமங்கலம் கிராமத்திற்கு சொந்தமான 2 ஏக்கர் பொதுச்சொத்தின் விவசாய வருவாயை தலையாறி செலவினங்களுக்கு கொடுப்பது வழக்கமாக இருந்தது. இந்த சொத்தினை போலி ஆவணங்களை தயார் செய்து வேறு ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளனர். போலியான பத்திரம் பதிவு செய்து கிராம சொத்தை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிராம சொத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமமக்களிடம் உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com