மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு - உதவி ஆணையர் கைது

வழக்கில் ஏற்கனவே சொத்துவரி விதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு - உதவி ஆணையர் கைது
Published on

மதுரை,

மதுரை மாநகராட்சியில் நடந்த, ரூ.150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவால் மாநகராட்சியின் ஆளுங்கட்சியை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள், இரு நிலைக்குழு தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

வழக்கில் ஏற்கனவே ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். பில் கலெக்டர்கள் உட்பட 19 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கு அடிப்படையில், இம்முறைகேட்டை தற்போது மதுரை டி.ஐ.ஜி., அபினவ் குமார் தலைமையிலான குழு விசாரிக்கிறது.

இந்நிலையில், தூத்துக்குடியில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முறைகேடு நடந்த காலகட்டத்தில் இவர் மதுரையில் பணியாற்றி உள்ளார். கைது செய்யப்பட்ட சுரேஷ்குமாரை, விசாரணைக்காக போலீசார் மதுரை அழைத்து வருகின்றனர்.

இம்முறைகேட்டில் கைதான சொத்து வரி குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் என்பவர் அளித்த போலீசில் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com