குளித்தலையில் வாகன விதிமீறலில் ஈடுபட்ட 1,538 பேர் மீது வழக்கு

குளித்தலையில் வாகன விதிமீறலில் ஈடுபட்ட 1,538 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
குளித்தலையில் வாகன விதிமீறலில் ஈடுபட்ட 1,538 பேர் மீது வழக்கு
Published on

வாகன சோதனை

குளித்தலை, லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குளித்தலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த மே மாதம் செய்த வாகன சோதனையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியது, உரிய நம்பர் பிளேட் பொருத்தாமல் இருந்தது, சரக்கு வேன்களில் ஆட்களை ஏற்றுவது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவது, சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு வாகன விதிமீறல்களில் ஈடுபட்டதாக மொத்தம் 1,538 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து குளித்தலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாவுக்கரசு கூறியதாவது:-

1,538 பேர் மீது வழக்கு

குளித்தலை, தோகைமலை, லாலாபேட்டை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாகன சோதனைகளில் லாரியில் அதிக பாரம் ஏற்றிவந்தது, மதுபோதையில் வாகனம் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, தலைக்கவசம் அணியாதது, இன்சூரன்ஸ் இல்லாதது, 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது தொடர்பாக மொத்தம் 1,538 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com