திமுகவிடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: தவெக கண்டனம்

திமுகவை கண்டிப்பதற்கு எல்லா வார்த்தைகளையும் பயன்படுத்தியாகிவிட்டது என தவெக தெரிவித்துள்ளது.
திமுகவிடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: தவெக கண்டனம்
Published on

சென்னை,

தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சென்னை திருமங்கலம் அருகே 13 வயதான சிறுமிக்கு வருடக் கணக்கில் பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த கேடுகெட்ட தகிடு தத்த, பாலியல் குற்ற சமூக விரோதிகளின் கழகமாக செயல்படக்கூடிய திமுகவை கண்டிப்பதற்கு எல்லா வார்த்தைகளையும் பயன்படுத்தியாகிவிட்டது. கண்டிப்பதற்கு, வசை பாடுவதற்கு இனி வார்த்தைகள் இல்லை..

வாக்குரிமை மட்டும் தான் இருக்கிறது!

தமிழ்நாட்டு தாய்மார்களே தமிழ்நாட்டுப் பெற்றோர்களே... திமுகவிடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com