எருமப்பட்டியில்பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எருமப்பட்டியில்பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

எருமப்பட்டி:

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் எருமப்பட்டி ஒன்றிய பா.ஜனதா சார்பில் தி.மு.க. அரசை கண்டித்தும், தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு துணை போகும் அதிகாரிகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு ஒன்றிய தலைவர் செந்தில் பாரதி வரவேற்றார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். கட்சியின் மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய கவுன்சிலர் துரைராஜ், மாநில உள்ளாட்சி பிரிவு செயலாளர் துரைசாமி, மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் ஆறுமுகம், மேற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணி, மகளிர் அணி மாவட்ட தலைவர் சித்ரா உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com