நல்லம்பள்ளி அருகேதரமான சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

நல்லம்பள்ளி அருகேதரமான சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
Published on

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே பாகலஅள்ளி ஊராட்சி பாகல்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் மயானத்துக்கு செல்லும் வழியில் ரூ.3 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பணியின்போது ஜல்லிக்கற்கள் முறையாக சேர்க்காமல் தரமில்லாமல் சாலை அமைக்கப்பட்டதால் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு சேதம் அடைந்த நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மயானத்துக்கு செல்லும் வழியில் புதிய சாலை அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று தரமில்லாமல் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com