கர்நாடக அரசை கண்டித்துதர்மபுரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசை கண்டித்துதர்மபுரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமையை பெற்று தராமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தின் காவிரி உரிமையை நிலைநாட்ட தவறிய தமிழக அரசை கண்டித்தும் தர்மபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் ஆனந்தன், கிழக்கு மாவட்ட பொருளாளர் நேதாஜி, கிழக்கு மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி தொகுதி செயலாளர் சிவக்குமார், கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் கனகராஜ், இளைஞர் பாசறை செயலாளர் செந்தில்குமார், இணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரூர் தொகுதி தலைவர் இளையராஜா, தொகுதி செயலாளர் திலீப், பாலக்கோடு தொகுதி செயலாளர் திருநீலகண்டன், பென்னாகரம் தொகுதி செயலாளர் கோபி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி சிலம்பரசன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com