மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாபு சுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் அப்துல் அஜீஸ் வரவேற்றார். நிர்வாகிகள் மாதேசன், வெங்கடேசன், நாகையா, சம்பத்குமார், வையாபுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சிறப்பு தலைவர் பொன்முடி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். மாவட்ட கல்வி அலுவலராக தற்காலிக பொறுப்பு வழங்கும் போது சம ஊதிய நிலையில் உள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தலைமை ஆசிரியர்கள் சிங்காரவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் கற்பகம் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com