கடலூரில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூரில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா.
கடலூரில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

கடலூ,

கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் புதிய பஸ் நிலையம் அமைக்கக்கோரி அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் புருஷோத்தமன், மனோகரன், கிருஷ்ணமூர்த்தி, நடராஜன், மாயவேல், இளங்கோவன், ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுச்செயலாளர் மருதவாணன் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் வல்லுனர் குழு ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் கலெக்டர் அலுவலகம் அருகில் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆகவே அதே இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். பல மாவட்டங்களில் 2 பஸ் நிலையங்கள் உள்ளது.

அதன்படி கடலூரிலும் 2 இடங்களில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க செம்மண்டலத்தில் ஒரு பல்லடுக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். அரிசி பெரியாங்குப்பத்தில் உள்ள அரசு இடத்தில் தோட்டக்கலை பல்கலைக்கழகமும், விவசாய கல்லூரியும் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் நிர்வாகிகள் கோமதிநாயகம், கல்யாண்குமார், அப்பாதுரை, ராஜா, ஆறுமுகம், காசிநாதன், ரவிச்சந்திரன், கண்ணபிரான், கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொதுச்செயலாளர் தேவநாதன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com