நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தேரடி திடலில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் கற்பகராஜ், மாவட்ட பொருளாளர் அங்கையர்கனி பாண்டி, சங்கரன்கோவில் தொகுதி செயலாளர் பீர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி தலைவர் சாந்தகுமார், குருவிகுளம் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர்கள் எபிநேசர், கண்ணன், விஜயகுமார், அந்தோணி ராஜ், பாண்டியராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com