விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெணசியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர். கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வஞ்சி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சண்முகம், தீர்த்தகிரி, ராஜசேகர், அர்ச்சுனன் பொன்னுசாமி, மனோகரன், வெங்கடாசலம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com