தேனியில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனியில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தேனி மாவட்ட முப்படை முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கத்தின் சார்பில் தேனி பங்களாமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில், முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் கலந்துகொண்டு, ராணுவ வீரர் பிரபு கொலை சம்பவத்தை கண்டித்து பேசினர். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com