பாலக்கோட்டில்கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாலக்கோட்டில்கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

பாலக்கோடு:

பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று கவனஈர்ப்பு ஆர்பாட்டம் வட்ட தலைவர் மாதப்பன் தலைமையில் நடைபெற்றது. வட்ட செயலாளர் சின்னசாமி, பொருளாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சாம்ராஜ் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி வழங்குதல், பயணப்படி 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு கால தாமதமின்றி பணி வரன் முறை செய்தல், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவி உயர்வு 6 ஆண்டில் இருந்து 3 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு கிராம நிர்வாக சங்க ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com