கொடைரோடு சுங்கச்சாவடியில் அமைப்புசாரா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கொடைரோடு சுங்கச்சாவடியில் அமைப்புசாரா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடைரோடு சுங்கச்சாவடியில் அமைப்புசாரா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுனர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் டிரைவர்கள் பணி பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து டிரைவர்களுக்கும் தபால் ஓட்டு வழங்க வேண்டும். மோட்டார் தொழிலுக்கு என்று தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் கொடைரோட்டில், மதுரை-திண்டுக்கல் சாலையில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் அமைப்புசாரா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணை ஆலோசகர் அந்தோணி அமல்ராஜ், மதுரை மாவட்ட தலைவர் ரெங்கசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் மருது, திண்டுக்கல் மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் சூசைமாணிக்கம், செந்தில், துரை, பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையொட்டி பாதுகாப்பு பணியில் அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com