கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்
Published on

பெருந்துறை

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கான்கிரீட் தளம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாசன விவசாயிகள், கடந்த மாதம் பெருந்துறை கூரபாளையம் பிரிவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி 7 நாட்கள் தொடர்ந்த உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

கருப்புக்கொடி கட்டி...

இந்தநிலையில் மற்றொரு பிரிவு விவசாயிகள், கீழ்பவானி வாய்க்காலின் கடைமடை வரை தண்ணீர் செல்ல வேண்டுமென்றால் வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தே தீர வேண்டும் என்ற கோரிக்கை மனுவை நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் வழங்கினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று பெருந்துறை ஒன்றியத்தை சேர்ந்த ஆயப்பரப்பு, கருங்கரடு, காஞ்சிக்கோவில், கொண்டையன்காட்டுவலசு, சூரியம்பாளையம், கொங்கு நகர் முதலான ஊர்களில் வசிக்கும் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி கண்டனத்தை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com