கோவையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - எஸ்.பி.வேலுமணி

பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
கோவையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - எஸ்.பி.வேலுமணி
Published on

கோவை,

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசைக் கண்டித்து, கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, எனது முன்னிலையில், இன்று மாலை 4 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே, கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

விடியா திமுக அரசின் ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமான, சர்வாதிகாரப் போக்கிலான ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்து, பொதுமக்கள் மற்றும் மகளிருக்கான பாதுகாப்பையும் இளைஞர்களின் நல்லதொரு எதிர்காலத்தையும் உறுதிசெய்யும் இந்த ஜனநாயகப் போராட்டத்தில் நம் கழக உடன்பிறப்புகள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com