ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு - பொதுமக்கள் சாலை மறியல்ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு - பொதுமக்கள் சாலை மறியல்
Published on

சென்னை புளியந்தோப்பு அங்காளம்மன் கோவில் தெருவில் மழை காலங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் அதிக அளவில் மழைநீர் தேங்கி நிற்பது வழக்கம். அந்த பகுதியில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டி இருப்பதால் கால்வாய் சுருங்கி இருப்பதே இதற்கு காரணம். எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கால்வாய் மீதுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிவிட்டு, கால்வாயை சீரமைத்து மழைநீரை கால்வாய் வழியாக பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றப்பட வேண்டும்.

இதற்காக கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றவும், அவர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு இதற்காக வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் நேற்று அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதையறிந்த அந்த பகுதி பொதுமக்கள், தங்கள் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தரிவித்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை மற்றும் மோதிலால் நேரு சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் அழகேசன் தலைமையில் போலீசார் விரைந்து வந்த சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்று சால மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com