குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியல் செய்தனர்.
குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
Published on

குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியல் செய்தனர்.

திருப்பத்தூர் நகராட்சி 36-வது வார்டு திருமால் நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் திருப்பத்தூர் மாடப்பள்ளி ஏரிக்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த டவுன் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில் கிராம பகுதியில் இருந்த இந்தப்பகுதியை நகராட்சியுடன் இணைத்த பிறகு காவிரி கூட்டுக் குடிநீர் இதுவரை கொடுக்கப்படவில்லை. ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வரும் தண்ணீரும் தரப்படவில்லை. இதனால் எங்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை எனக்கூறி சாலை மறியலை கைவிட மறுத்தனர்.

உடனடியாக நகராட்சி கவுன்சிலர் வெற்றி கொண்டான் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com