ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தொவித்துஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தொவித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாகள்.
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தொவித்துஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பேசியதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பி.க்கு, குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஈரோடு மூலப்பட்டறை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, நகர் மன்ற தலைவர் நல்லசாமி, சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பாஷா, மண்டல தலைவர் ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர், ஊடகப்பிரிவு தலைவர் அர்சத், பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜய கண்ணா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com