மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு.... கோலம் மூலம் கோபத்தை காட்டிய பெண்கள்

இந்த கோலத்தின் மூலம் நூதன முறையில் பெண்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு.... கோலம் மூலம் கோபத்தை காட்டிய பெண்கள்
Published on

சென்னை,

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.

இதற்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அய்யம்பாக்கம் ஊராட்சி பகுதியில் மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலத்தில் கோபத்தை காட்டியுள்ளனர்.

இதில் இந்தியை திணிக்காதே, தமிழர்களை வஞ்சிக்காதே, மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை தனது வீட்டிற்கு முன் கோலமாக போட்டுள்ளனர். இந்த கோலத்தின் மூலம் நூதன முறையில் பெண்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com