

ஈரோடு,
எத்தனால் ஆலையை மூடக் கோரி 10-வது நாளாக கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தீயூர் அருகே பூனாட்சி பகுதியில் எத்தனால் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளிவரும் ரசாயன கழிவுகள் அருகிலுள்ள சித்தார் ஓடையில் கலப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி, ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களுடன் நத்தமேடு பள்ளி மாணவர்கள் 141 பேரும், ராமச்சந்திர பள்ளி மாணவர்கள் 15 பேரும் 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எத்தனால் ஆலையை மூடும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.