டீசல் விலை உயர்வு:மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு விரைவில் போராட்டம் - லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
டீசல் விலை உயர்வு:மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு விரைவில் போராட்டம் - லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
Published on

சேலம்,

டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று சேலத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலை உயர்வை கண்டித்து விரைவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும்.

சரக்கு ஏற்றுக்கூலி, இறக்கு கூலியில் பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக 9-ந் தேதி விழுப்புரத்தில் நடக்கும் வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவுடன் ஆலோசனை செய்து தீர்வு காணப்படும். .

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com