திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்லக்கோரி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்லக்கோரி ஆர்ப்பாட்டம்
Published on

திருவள்ளூர் ரெயில் நிலையம் வழியாக நாள்தோறும் 180 புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. திருவள்ளூர் ரெயில் நிலையத்தை நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

திருவள்ளூர் ரெயில் நிலையம் வழியாக 60 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 11 ரெயில்கள் மட்டுமே வந்து செல்கின்றன. மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ரெயில் பயணிகள் சங்க கூட்டமைப்பு, திருவள்ளூர் அனைத்து வியாபாரிகள் சங்கம், பெரியகுப்பம் வியாபாரிகள் சங்கம், மணவாளநகர் பொது வியாபாரிகள் நல சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று, திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com