திமுக அரசை கண்டித்து கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் - இபிஎஸ் பங்கேற்பு

திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம்; விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, திமுக அரசைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Also Read
தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி மருத்துவக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் - மருத்துவர் கைது
கோப்புப்படம்

தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, எம்.ஜி.ஆர். நகர் "கே.கே சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில்” நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

Also Read
திமுக கடந்த சில நாட்களாக பதற்றத்தில் உள்ளது - அண்ணாமலை
கோப்புப்படம்
X

Daily Thanthi
www.dailythanthi.com